03 October 2018

வானாளும் தேவனே


62. Salvator Mundi; - Moscow, 
     Hermon       (377)               6,6,4,6,6,6,4

"O Jesus Christ, dein"

1.         வானாளும் தேவனே,
            மானிடனாகவே
                        பிறந்தீரே;
            எங்கள் சுபாவத்தை
            திருத்தி, பக்தியை
            வளர்த்து, மோட்சத்தை
                        அருள்வீரே.

2.         ஆ தேவ மைந்தனே,
            நீர் தாம் சஞ்சீவியே,
                        ஆகையாலே
            நிர்ப்பந்த மாந்தரை,
            நாடின பேரன்பை
            நினைக்கும் சிந்தையை
                        அளிப்பீரே.

3.         அநாதி ஜோதியோ,
            அடியார் நெஞ்சிலே
                        ப்ரகாசியும்;
            உம்மால் எல்லாருக்கும்
            ரட்சிப்புண்டாகவும்
            மெஞ்ஞானம் தோன்றவும்
                        கடாட்சியும்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...