இரக்கமுள்ள யேசுவே


64. Wareham                                                  (378)   L.M

"Gelobet seist du, Jesu Christ"

1.         இரக்கமுள்ள யேசுவே,
            நரரின் தன்மையாகவே
            பிறந்ததால் துதிக்கிறோம்
            சுரரும் பாடக் கேட்கிறோம்.

2.         அளவில்லாத வல்லவர்,
            அனைத்தையும் படைத்தவர்
            மதலையாய்ப் பிறந்தனர்,
            மனுஷர்போல வளர்ந்தனர்.

3.         அநாதி ஜோதி பூமிக்கு
            வெளிச்சம் தோன்ற மாந்தர்க்கு
            மெய்ச்சுடலாய் இருட்டிலே
            ப்ரகாசமாய் உதித்ததே;

4.         அதைக் கருத்தாய் சிந்தித்து,
            பூலோகத்தாரே பூரித்து,
            அஜ்ஜோதி நோக்கிப் பாருங்கள்,
            அதில் நடக்க வாருங்கள்.       


Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே