துக்கம் கொண்டாட வாருமே
O come and mourn with me
St. Cross
107 L.M.
1. துக்கம் கொண்டாட வாருமே,
பாரும்!
நம் மீட்பர் மரித்தார்;
திகில்
கலக்கம் கொள்ளுவோம்;
இயேசு
சிலுவையில் மாண்டார்.
2. போர்
வீரர், யூதர் நிந்தித்தும்
மா
பொறுமையாய்ச் சகித்தார்
நாமோ
புலம்பி அழுவோம்;
இயேசு
சிலுவையில் மாண்டார்.
3. கை
காலை ஆணி பீறிற்றே,
தவனத்தால்
நா வறண்டார்;
கண்
ரத்தத்தாலே மங்கிற்றே;
இயேசு
சிலுவையில் மாண்டார்.
4. மும்மணி
நேரம் மாந்தர்க்காய்
தம்
மெளனத்தாலே கெஞ்சினார்
நல்
வாக்கியம் ஏழும் மொழிந்தே
இயேசு
சிலுவையில் மாண்டார்.
5. சிலுவையண்டை
வந்துசேர்,
நேசர்
ஐங்காயம் நோக்கிப்பார்;
ஒப்பற்ற
அன்பைச் சிந்தியேன்;
இயேசு
சிலுவையில் மாண்டார்.
6. உருகும்
நெஞ்சும் கண்ணீரும்
உள்ளன்பும்
தாரும், இயேசுவே;
மாந்தர்மீதன்பு
கூர்ந்ததால்
நீர்
சிலுவையில் மாண்டீரே!
Comments
Post a Comment