துக்கம் திகில் இருள் சூழ
Through the night of doubt and
sorrow
Marching
382 8,
7, 8, 7
1. துக்கம் திகில்
இருள் சூழ,
மோட்ச யாத்திரை செய்கிறோம்;
கீதம் பாடி முன்னே நோக்கி
மோட்ச பாதை செல்கிறோம்.
2. இருள் சூழ்ந்தும் பிரகாசிக்கும்
தீபஸ்தம்ப ஜோதியும்;
வீரமாக ஐக்கியமாக
முன்னே செல்வோம் ராவிலும்.
3. பக்தரோடு தங்கிச் செல்லும்
தெய்வமாம் ஒளி ஒன்றே;
இருள் நீங்க அச்சம் நீங்கும்,
பாதை முற்றும் பகலே.
4. எங்கள் ஜீவ நோக்கம் ஒன்றே,
குன்றா விசுவாசமும்;
எங்கள் ஊக்க வாஞ்சை ஒன்றே,
ஒன்றே எம் நம்பிக்கையும்.
5. மோட்சம் செல்லும் கோடிப் பேரும்
பாடும் பாட்டு ஒன்றேயாம்;
ஆபத்து, போராட்டம், தெய்வப்
பாதை செல்வதும் ஒன்றாம்.
6. மோட்ச கரை சேர்ந்த பின்னும்
பூரிப்பானந்தம் ஒன்றே;
ஒரே சர்வ வல்ல பிதா
அன்பால் அரசாள்வாரே.
7. முன்னே செல்வீர், தோழரே நீர்,
சிலுவை உம் பலமாம்;
நிந்தை தாங்கி போர்புரிவீர்
ஆயுள் காலமும் எல்லாம்.
8. நியாயத் தீர்ப்பு மா தினத்தில்
கல்லறை விட்டெழுவோம்;
துக்கம் திகில் யாவும் நீங்கும்,
பாடும் ராவும் ஓய்ந்துபோம்.
Comments
Post a Comment