துயருற்ற வேந்தரே


Throned upon the awful Trce
Gethsemane.     Redhead  76

118                                                                 7, 7, 7, 7, 7, 7

          என் கடவுளே, என் கடவுளே; ஏன் என்னைக் கைவிட்டீர்?

1.         துயருற்ற வேந்தரே,
            சிலுவை ஆசனரே,
            நோவால் வாடும் முகத்தை
            இருள் திரை மூடிற்றே;
            எண்ணிறைந்த துன்பம் நீர்
            மௌனமாகச் சகித்தீர்.

2.         பலியாக மரிக்கும்
            வேளை வரும் அளவும்
            மூன்று மணி நேரமாய்,
            துணையின்றி மௌனமாய்
            காரிருளில் தேவரீர்
            பேயோடே போராடினீர்.

3.         தெய்வ ஏக மைந்தனார்
            அபிஷேக நாதனார்,
            தேவனே, என் தேவனே
            என்தனை ஏன் கைவிட்டீர்?’
            என்றுரைக்கும் வாசகம்
            கேள், இருண்ட ரகசியம்!

4.         துயர் திகில் இருண்டே
            சூழும்போது, தாசரை
            கைவிடாதபடி நீர்
            கைவிடப்பட்டிருந்தீர்;
            இக்கட்டில் சமீபம் நீர்
            என்றிதாலே கற்பிப்பீர்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு