விண்ணோரின் வேந்தரே
183. Salvator Mundi.
Calvary,
Olivet, 6, 6,
4, 6, 6, 6, 4.
"Our victorious Leader"
1. விண்ணோரின்
வேந்தரே;
மண்ணோரின் மீட்பரே,
மா தேவரீர்,
கேட்டில் என் ரட்சிப்பாய்,
தாழ்வில் என் ஜீவனாய்
விளங்குவீர்.
2. என் பாவத் தீட்டை நீர்
கழுவி நீக்கினீர்,
நல் மீட்பரே;
என் சாபம் தோஷமும்
என் பாவ குஷ்டமும்
நீர் முற்றும் அகற்றும்
அன்பாகவே.
3. பிசாசு பலத்தை
காண்பித்துப் பயத்தை
அககோரமாய்
என்னில் உண்டாக்கினும்,
சகாயராயிரும்;
சாத்தானை அகற்றும்,
மா தயவாய்.
4. நீர் யேசு, ஆகையால்
இம்மேன்மை நாமத்தால்
நான் வெல்லுவேன்;
நீர் ஜோதியானதால்
உம்தன் ப்ரகாசத்தால்
நேர் பாதை செல்வதால்
சந்தோஷப்பேன்.
Comments
Post a Comment