கடல் கொந்தளித்துப் பொங்க
184. Austria 8s,
7s, 8.
"Christ on the sea"
1. கடல் கொந்தளித்துப் பொங்க,
கப்பல் ஆடிச் செல்கையில்
புசல்
காற்று சீறி வீச
பாய் கிழிந்து போகையில்,
யேசு
எங்களிடம் வந்து
கப்பலோட்டியாய் இரும்;
காற்றமைத்துத்
துணை நின்று
கரை சேரச் செய்திடும்.
2. கப்பல்
ஏறிப் போவோருக்கு
கடும் மோசம் வரினும்,
பாறை,
மின், முழக்கம், காற்று,
உமக்கெல்லாம் அடங்கும்
இருளில்
நீர் பரஞ்சோதி,
வெய்யிலில் நீர் நிழலே
யாத்திரையில்
திசை காட்டி,
சாவில் எங்கள் ஜீவனே.
3. எங்கள்
உள்ளம் உம்மை நோக்கும்
இன்ப துன்ப காலத்தில்;
எங்கள்
ஆவி உம்மில் தங்கும்
இகபர ஸ்தலத்தில்;
யேசு
எங்களிடம் வந்து
கப்பலோட்டியாய் இரும்
காற்றடக்கித்
துணை நின்று
கரையேறச் செய்திடும்.
Comments
Post a Comment