25 October 2018

சேதம்அற யாவும் வர


182. All for Jesus, St. Oswald, 

 Dorrance.                                                8s, 7s.

"Gott wills machen, dass die Sachen"

1.          சேதம்அற யாவும் வர,
                        கர்த்தர் தாம் நடத்துவார்;
            காற்றடித்தும், கொந்தளித்தும்,
                        யேசுவை நீ பற்றப் பார்.

2.         “யேசு பாரார், அவர் காரார்,
                        அவர் கேளார்”. என்னாதே;
            கலங்காதே, தவிக்காதே,
                        நம்பினோனை விடாரே.

3.         கண் மூடாத உறங்காத
                        உன் கர்த்தாவைப் பற்றி நீ
            அவர் தாமே காப்பாராமே
                        என்று அவரைப் பணி.

4.         உன் விசாரம் மா விஸ்தாரம்
                        ஆகிலும் கர்த்தாவுக்கு
            நீ கீழ்ப்பட்டு, க்லேசமற்று
                        அவருக்குக் காத்திரு.

5.         தேவ கைக்கும் வல்லமைக்கும்
                        சகலமும் கூடாதோ?
            எந்தச் சிக்கும் எந்தப் பிக்கும்
                        அவரால் அறும் அல்லோ?

6.         சீரில்லாத உன் ஆகாத
                        மனதுன்னை ஆள்வது
            நல்லதல்ல; அதற்கல்ல,
                        கர்த்தருக்குக் கீழ்ப்படு.

7.         நேச யேசு தேவரீர்க்கு
                        சித்தமான யாவையும்
            நீர் குறித்து, நீர் கற்பித்து,
                        நீர் நடத்தி அருளும்.

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...