ஒன்றே தேவையென்று சொன்னீர்
181. St. Raphael. (197) 8, 7, 8, 7, 4, 7.
"Eins is noth: ach Herr, dies Eine"
1. ஒன்றே தேவையென்று
சொன்னீர்
நாதா, அதை நாடுவேன்;
அன்பாய் என்னை நீர் அழைத்தீர்;
பாவம் முற்றும் வெறுப்பேன்;
மாய லோகம்
தழுவாமல் ஜீவிப்பேன்.
2. நன்மை சிஷ்டிகளிடத்தில்
தேடினாலும், கிட்டாதே;
யேசு ஸ்வாமி உம்மிடத்தில்
வாழ்வெல்லாம் கிடைக்குமே
அதைத்
தாரும்,
நேசமுள்ள
மீட்பரே.
3. இந்த நன்மை மரியாளே
வேண்டுமென்று வாஞ்சையாய்
தேடித் தெரிந்து கொண்டாளே;
உம்மிடத்தில் சாந்தமாய்
கேட்ட நன்மை
பெற்றுக்
கொண்டாள் பூரிப்பாய்.
4. நானும் முழு வாஞ்சையோடும்
உம்மையே, என் யேசுவே,
அண்டிக்கொண்டேன்; நீர் என்னோடும்
ஐக்யமாகும், கர்த்தரே;
உம்மைப்
பற்றும்
விசுவாசம்
ஈயுமே.
Comments
Post a Comment