சுத்த ஆவி என்னில் தங்கும்
133. Gounod. All Saints, Irby 8, 7, 8, 7, 7, 7.
"Gracious
Spirit, dwell with me"
1. சுத்த ஆவி, என்னில் தங்கும்;
நானும்
சுத்தன் ஆகவே
பாவ
அழுக்கெல்லாம் நீக்கும்;
உமதாலயமாகவே
என்னை
நீர் சிங்காரியும்;
வாசம்
பண்ணும் நித்தமும்.
2. சத்ய
ஆவி, என்னில் தங்கும்;
நானும்
சத்யன் ஆகவே
தேவ
பக்தி என்னில் முற்றும்
வளர்ந்தேறச்
செய்யுமே;
நீர்
என்னில் ப்ரவேசியும்
ஆண்டுகொள்ளும்
நித்தமும்.
3. நேச
ஆவி, என்னில் தங்கும்,
நானும்
நேசன் ஆகவே
துர்ச்சுபாவம்
போகப்பண்ணும்;
அன்பில்
நான் வேரூன்றவே
அன்பின்
ஸ்வாலை எழுப்பும்,
மென்மேலும்
வளர்த்திடும்.
4. வல்ல
ஆவி, என்னில் தங்கும்;
நானும்
வல்லோன் ஆகவே
சாத்தான்
என்னைத் தூண்டிவிடும்
போது
ஜெயங்கொள்ளவே
நீர்
என் பக்கத்தில் இரும்
என்னைப்
பலப்படுத்தும்.
5. நல்ல
ஆவி, என்னில் தங்கும்;
நானும்
நல்லோன் ஆகவே
பகை,
மேட்டிமை, விரோதம்,
மற்றும்
தீமை யாவுமே
என்னை
விட்டகற்றுமேன்,
என்னைச்
சீர்ப்படுத்துமேன்.
6. தெய்வ
ஆவி, என்னில் தங்கும்
நானும்
உம்மில் தங்கவே
மோட்ச
பாதையில் நடத்தும்,
யேசுவின்
முகத்தையே
தெளிவாகக்
காண்பியும்;
என்னை
முற்றும் ரட்சியும்.
Comments
Post a Comment