நல் ஆவியே நான் பாழ் நிலம்


132. Nox Proecissit.  St. Stephen,  St. Agnes                 C.M.

"Mein Gott, das Herz ich bringe dir"

1.         நல் ஆவியே, நான் பாழ் நிலம்,
                        இரக்கமாய் இரும்;
            விண் மாரியால் என் ஆத்துமம்
                        செழிக்கச் செய்திடும்.

2.         இருள் பகை விரோதமும்
                        உம்மாலே நீங்கவே
            நற்புத்தி அன்பு சாந்தமும்
                        உண்டாக்கும் ஆவியே.

3.         என் உள்ளத்தை இரக்கமாய்
                        சுத்திகரித்திடும்;
            அதை என் மீட்பர் சாயலாய்
                        திருத்தி ஆண்டிடும்.

4.         உமது ஜீவ மார்க்கத்தில்
                        உறுதியாகவும்
            நடக்கப்பண்ணி, மோட்சத்தில்
                        நான் சேர அருளும்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே