11 October 2018

நீர் வாரும் கர்த்தாவே


94. Swabia, Day, Gorton                                       S.M.

"Come, Lord, and tarry not"

1.         நீர் வாரும், கர்த்தாவே;
            ராக் காலம் சென்று போம்;
            மா அருணோதயம் காணவே
            ஆனந்தம் ஆகுவோம்.

2.         நீர் வாரும், பக்தர்கள்
            களைத்துச் சோர்கின்றார்;
            நல்லாவி மணவாட்டியும்,
            “நீர் வாரும்” என்கிறார்.

3.         நீர் வாரும், சிஷ்டியும்
            தான் படும் துன்பத்தால்
            ஏகோபித் தேங்கி ஆவலாய்
            தவித்து நிற்பதால்

4.         நீர் வாரும், ஆண்டவா;
            மாற்றாரைச் சந்திப்பீர்,
            இருப்புக்கோலால் தண்டித்து
            கீழாக்கிப் போடுவீர்.

5.         நீர் வாரும், யேசுவே;
            பயிர் முதிர்ந்ததே,
            உம் அரிவாளை நீட்டுமேன்,
            மா நீதிபரரே.

6.         நீர் வாரும் வையத்தில்
            பேர் வாழ்வை நாட்டுவீர்;
            பாழான பூமி முற்றிலும்
            நீர் புதிதாக்குவீர்.

7.         நீர் வாரும் ராஜாவே;
            பூலோகம் ஆளுவீர்;
            நீங்காத சமாதானத்தின்
            செங்கோல் செலுத்துவீர்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...