ஜகத்து நீதிபதியே
95. Veni cito Peniel (384)
LM 6l.
"Oh,
quickly come, dread Judge..."
1. ஜகத்து நீதிபதியே,
சந்தேகம், மருள் நீக்கிடும்;
மகத்வ உம்தன் காட்சியே
மெய்மை விளங்கச் செய்திடும்;
விரைந்து வாரும்; உம்முன்னே
மறையும் எந்தப் பொய்யுமே.
2. மன்னா மன்னா, வந்தாளுமே
மண்ணிலும் தாசர் நெஞ்சிலும்;
இன்னா இக்கட்டு நீங்கவே
இகத்தின் பாவம் மாய்ந்திடும்!
விரைந்து வாரும்; உம்முன்னே
மறையும் எந்தத் தீங்குமே.
3. எல்லா நரர்க்கும் ஜீவனே,
எவ்வீட்டிலும் பலத்தோடும்
பொல்லாத சாவு புகவே
பாடுற்றோர் அடியார்களும்;
விரைந்து வாரும், உம்முன்னே
மறைந்து நோவு சாவுமே.
4. மெய்யான எங்கள் ஜோதியே,
மங்குல எப்பாலும் மூடவும்,
அய்யா, உம்தன் வருகைக்கே
ஆசித்து நின்றோம் நாங்களும்;
விரைந்து வாரும், யேசுவே,
வந்தடியாரைத் தேற்றுமே.
Comments
Post a Comment