03 October 2018

தயவுள்ள யேசுவே


65. University College; Lubeck.                                                      7s.

"Jesu, rufe mich"

1.         தயவுள்ள யேசுவே,
            என்னை உம்மிடத்திலே
            சேர்த்துக் கொள்வதற்கு நீர்
            ஏழையாகத் தோன்றினீர்.

2.         பெல்லேம் சிற்றூராயினும்
            அங்கே நீர் பிறக்கவும்,
            மேன்மையுள்ள தாயிற்று,
            வேதம் நிறைவேறிற்று.

3.         தேவரீரின் ஜென்மமே
            புத்திக்கு எட்டாததே;
            வானத்தூதர் கூட்டத்தார்
            வாழ்த்தி அதைப் பாடினார்.

4.         நல்ல செய்தி கேட்கவே
            மேய்ப்பர் காணச் சென்றாரே;
            ஞானிகளும் வந்தனர்;
            காணிக்கை படைத்தனர்.

5.         அவ்வாறும்மை நாங்களும்
            அண்டிப் பாதம் போற்றவும்,
            வந்து எங்கள் நெஞ்சிலே
            வாசஞ் செய்யும் கர்த்தரே.

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...