வாரும் வாஞ்சைப்பட்ட யேசு


66. Austria                                                                 8s, 7s, 8l.

"Come, Thou long expected Jesus"

1.        வாரும் வாஞ்சைப்பட்ட யேசு,
                        மீட்பராக வந்த நீர்
            பாரமான பாவக்கேடு
                        நீங்கச் செய்து தேற்றுவீர்;
            இஸ்ரவேலின் சர்வ வல்ல
                        மேசியாவாம் கர்த்தர் நீர்;
            மாந்தர் யாரும் எதிர்பார்த்த
                        பாவ நாசர் தேவரீர்.

2.         ரட்சித்தாளப் பாரில் வந்த
                        பிள்ளையான ராயரே,
            என்றும் உம்மை அண்டிக் கொள்ள
                        அருள் செய்யும் மீட்பரே.
            நித்திய ஆவி எங்கள் நெஞ்சில்
                        தங்கி ஆள அருளும்;
            உம்தன் புண்யத்தாலே விண்ணில்
                        நாங்கள் வாழச் செய்திடும்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு