விண் வாசஸ்தலமாம்
There is a blessed Home
The Blessed Home
407 6,
6, 6, 6 D.
1. விண் வாசஸ்தலமாம்
பேரின்ப வீடுண்டே;
கிலேசம் பாடெல்லாம்
இல்லாமல் போகுமே;
விஸ்வாசம் காட்சி ஆம்,
நம்பிக்கை சித்திக்கும்;
மா ஜோதியால் எல்லாம்
என்றும் பிரகாசிக்கும்.
2. தூதர் ஆராதிக்கும்
மெய்ப் பாக்கியமாம் ஸ்தலம்
அங்கே ஒலித்திடும்
சந்தோஷக் கீர்த்தனம்;
தெய்வாசனம் முன்னே
பல்லாயிரம் பக்தர்
திரியேக நாதரை
வணங்கிப் போற்றுவர்.
3. தெய்வாட்டுக் குட்டியின்
கை கால், விலாவிலே
ஐங்காயம் நோக்கிடின்,
ஒப்பற்ற இன்பமே!
சீர் வெற்றி ஈந்ததால்
அன்போடு சேவிப்போம்;
பேரருள் பெற்றதால்
என்றைக்கும் போற்றுவோம்.
4. துன்புற்ற பக்தரே,
விண் வீட்டை நாடுங்கள்;
தொய்யாமல் நித்தமே
முன் சென்று ஏகுங்கள்;
இத் துன்பம் மாறுமே,
மேலோக நாதனார்
நல் வார்த்தை சொல்லியே
பேரின்பம் ஈகுவார்.
(168, 169 பாக்களும்
பொருத்தமானவை.)
Comments
Post a Comment