விண் மீன் நோக்கிக் களிப்பாய்


As with gladness men of old

Dix

87                            7, 7, 7, 7, 7, 7

1.         விண் மீன் நோக்கிக் களிப்பாய்
            சாஸ்திரிமார்தாம் ஆவலாய்
            பின்சென்றார் அவ்வெள்ளியை
            முன் நடத்தும் ஜோதியை
            நேச கர்த்தா, நாங்களும்
            உம்மைப் பின் செல்வோம் என்றும்.

2.         தாழ்வாம் கொட்டில் நோக்கியே
            மகிழ்வோடு விரைந்தே
            விண் மண்ணோரும் வணங்கும்,
            பாதம் வீழ்ந்தார் பணிந்தும்,
            மனதார நாங்களும்,
            தேடிப் பாதம் சேரவும்.

3.         முன்னணையின் முன்னதாய்
            பொன் படைத்தார் பணிவாய்
            படைப்போமே நாங்களும்
            பொன் சம்பத்து யாவையும்
            தூய்மை பக்தி பூரிப்பாய்
            கிறிஸ்துவாம் விண் வேந்தர்க்காய்

4.         தூய இயேசு நித்தமும்
            ஜீவ பாதை நடத்தும்,
            பாரின் வாழ்க்கை முடிவில்
            ஆவியை நீர் மோட்சத்தில்
            சேர்ப்பீர், உந்தன் மாட்சியே
            போதும் வேண்டாம் ஜோதியே.

5.         ஒளிர் மோட்ச நாட்டிலே
            வேண்டாம் சிஷ்டி ஜோதியே;
            நீரே நித்திய சூரியனும்
            ஜோதி இன்பம் கிரீடமும்
            வேந்தே, என்றும் போற்றுவோம்
            அல்லேலூயா பாடுவோம்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு