18 October 2018

விண் வாழ்வில் ஆசை வைத்தல்ல


My God I love Thee

St. Francis Xavier

272                         C.M.

1.         விண் வாழ்வில் ஆசை வைத்தல்ல,
                        நித்திய சாவையே
            நான் அஞ்சியல்ல; ஆண்டவா,
                        நேசிப்பேன் உம்மையே.

2.         மனுக்குலம் அனைத்தையும்
                        உம் குரூசில் அணைத்தீர்;
            எனக்காய் ஆணி ஈட்டியும்
                        நிந்தையும் சகித்தீர்

3.         சத்துரு நீசன் எனக்காய்
                        சகித்தீர், நாதரே,
            இரத்த வேர்வை வேதனை
                        வல் துக்கம் சாவுமே

4.         என் திவ்விய நாதர் இயேசுவை,
                        நரக அச்சமும்
            நன் மோட்ச ஆசையும் அற்றே,
                        நேசிப்பேன் முற்றிலும்.

5.         எவ்வீவும் எதிர்நோக்கிடேன்
                        பிரதி பலனும்;
            என்னை மா, அன்பா! நேசித்தீர்
                        நேசிப்பேன் நீசனும்.

6.         என் சுவாமி நித்திய வேந்தரும்
                        நீர் தாமே; ஆசையால்
            என்றென்றும் உம்மை நேசித்துப்
                        புகழ்வேன் பாடலால்.    

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...