கதிக்கெல்லாம் மேலான
113. Passion Chorale 2 7s,
6s, 8l.
"Schatz
uber alle Schatze"
1. கதிக்கெல்லாம்
மேலான
கதியாம் யேசுவே;
ஒப்பற்ற நேசரான
பர்த்தாவே உமக்கே
என் நெஞ்சை வாஞ்சையாலே
ஒப்புக்கொடுக்கிறேன்;
நான் உமது நோவாலே
ஆரோக்யம் ஆனேன்.
2. ஆ! உமது குளிர்ந்த
முகத்தைக் காண்பியும்,
என் மனதில் மிகுந்த
அன்பாய் ப்ரகாசியும்;
நீர் என்னண்டை தரித்தால்,
வாழ்வேன், என் ஜீவனே;
நீர் அடியேனை விட்டால்
நிர்ப்பந்தன் ஆவேனே.
3. மண் மேன்மை, ஆஸ்தி யாவும்
குப்பை என்றெண்ணுவேன்
என் ஆவி உம்மைத்தாவும்,
பரத்தை நோக்குவேன்;
என் யேசுவே, நீர் தாமே
என் செல்வமானவர்;
உம்மால் மெய் வாழ்புண்டாமே,
மண் வாழ்வெல்லாம் பதர்.
4. என் பொழுதே, உதியும்;
ஆ! என்னை உம்மண்டை
அழைக்கத் தீவிரியும்;
நான் இந்த லோகத்தை
சந்தோஷமாக விட்டு
போவேன் என் ஜீவனே;
உம்மண்டையில் சுகித்து
இருப்பேன் கர்த்தரே.
இருப்பேன் கர்த்தரே.
Comments
Post a Comment