என்னை தேவ சாயலான


112. Leipsic - Regent square                                   8, 7, 8, 7, 4, 7

"Liebe, die du mich zum Bilde"

1.         என்னை தேவ சாயலான
                        சிஷ்டியாக்கி, பின்பு நான்
            கெட்டபோதென் மீட்பரான
                        கர்த்தரே; நீர் நேசவான்;
            என்னை என்றும்,
                        உம்மில் நிற்கச் செய்திடும்.

2.         மானிடர்க்கு மெய்மையையும்
                        மார்க்கத்தையும் நித்திய
            ஜீவனையும், மோட்சத்தையும்
                        ஈந்த மீட்பராகிய
                                    நீரே என்றும்
                        என்னில் தங்கி ரட்சியும்.

3.         எனக்காகப் பாடுபட்டு
                        நிந்தையுள்ளதாகிய
            சாவால் பரமண்டலத்து
                        பாக்கியத்தைத் தேடின
                                    யேசு ஸ்வாமி,
                        என்னைக் காத்திரட்சியும்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே