தாய் போல தேற்றி தந்தை போல ஆற்றி

தாய் போல தேற்றி தந்தை போல ஆற்றி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                        தாய்போல தேற்றி தந்தை போல ஆற்றி

                        தோள்மீது சுமந்திடும் என் இயேசையா-2

                        உம்மைபோல புரிந்து கொள்ள யாருமில்லையே

                        உம்மைபோல அரவணைக்க யாருமில்லையே

                        நீர்போதும் என் வாழ்விலே         - இயேசையா - (4)

 

1.          கடல் போல துன்பம் எனை சூழும் போதும்

            அதை பனிபோல உருகிட செய்பவரே

            கண்மணி போல் என்னை காப்பவரே

            உள்ளங்கையில் பொறிந்தென்னை நினைப்பவரே

            நீர் போதும் என் வாழ்விலே        - இயேசையா

 

2.         பெலவீன நேரம் என் கிருபை உனக்கு போதும்

            உன் பெலவீனத்தில் என் பெலன் தருவேன் என்றீர்

            நிழல் போல என் வாழ்வில் வருபவரே

            விலகாமல் துணை நின்று காப்பவரே

            நீர் போதும் என் வாழ்விலே       - இயேசையா

 

3.         ஒரு தாய் போல பாசம் தந்தை போல நேசம்     

            ஒரு தோழன் போல புரிந்துகொண்ட என் இயேசையா

            உம்மைப்போல புரிந்துகொண்டது யாருமில்லையே

            உம்மைப்போல அரவணைப்பதும் யாருமில்லையே

            நீர் போதும் என் வாழ்விலே       - இயேசையா

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு