04 May 2023

ஆண்டவனே உன்ன எண்ணி நாங்க படிச்ச பாட்டு

பாடல்

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

          ஆண்டவனே உன்ன எண்ணி நாங்க படிச்ச பாட்டு

            ராஜாவே உன்ன எண்ணி நாளும் படிக்கும் பாட்டு

                        பாட சலிக்கவில்ல

                        பாட்டும் மறக்கவில்ல

                        ஐயாவே உன்னவிட்டா ஆதரவா யாரும் இல்ல - எங்க

                        ஐயாவே உன்னவிட்டா ஆதரவா யாரும் இல்ல

 

1.         சத்தியத்தின் போதகரே சகலத்திற்கும் நாயகரே

            கேட்கும் முன்னே சுகமளிக்கும் இரக்கமுள்ள ஜீவகரே

                        என்னை உள்ளங்கையில் தூக்கி வைத்த இறைவன் அல்லவா

                        என்னை தாயின் வயிற்றில் தெரிந்து கொண்ட தெய்வம் அல்லவா

                        என்னை ஏற்றுக்கொள்ளும் இயேசுவே உம் பிள்ளை அல்லவா

                        நான் உம் பிள்ளை அல்லவா உங்க பிள்ளை அல்லவா

 

2.         உயிர்த்தெழுந்த மீட்பரே உங்க நாமம் போற்றுகிறோம்

            உலக மக்கள் நடுவினிலே உங்க புகழைச் சொல்லுகிறோம்

                        எங்க இதயத்தில வாழும் தெய்வம் நீங்கதானைய்யா

                        எங்களை இரவும் பகலும் பாதுகாக்கும் தெய்வம்தானைய்யா

                        எங்களை காத்தருளும் கர்த்தரே பிள்ளை அல்லவா

                        நாங்கள் பிள்ளை அல்லவா உங்க பிள்ளை அல்லவா

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...