இப்பாடலின்
கானொளியை முகநூலில்
காண...
சந்தோஷ
விண்ணொளியே - இயேசு
சாந்த
சொரூபி அவர்
பள்ளத்தாக்கின்
லீலி சாரோனின்
ரோஜா
பாரில்
மலர்ந்துதித்தார்
1. இன்பப்
பரலோகம் துறந்தவர்
துன்பம்
சகித்திட வந்தவர்
பாவ மனிதரை
மீட்டவர்
பலியாகவே
பிறந்தார் - சந்தோஷ
2. பூலோக மேன்மைகள்
தேடாதவர்
பேரும்
புகழும் நாடாதவர்
ஒன்றான
மெய் தேவன் இயேசுவே
என் ஆத்ம
இரட்சகரே - சந்தோஷ
3. ஜீவன் வழி
சத்தியம் எல்லாமிவர்
தேவாதி
தேவ சுதன் இவர்
இயேசு அல்லாமல்
வேறு யாருமில்லை
இரட்சண்யம்
ஈந்திடவே - சந்தோஷ
4. ஆடம்பர
வாழ்வை வெறுத்தவர்
அண்ணல்
எளிமையாய் வாழ்ந்தவர்
எம்மைத்
தம்மைப் போல மாற்றிடும்
இயேசுவைப்
பின்பற்றுவோம் - சந்தோஷ
5. எங்கள்
சமாதான பிரபு இவர்
இயேசு அதிசயமானவர்
வேதம் நிறைவேறும்
காலமே
வேகம் வருகின்றாரே - சந்தோஷ
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
No comments:
Post a Comment