தேவா உந்தன் கிருபை
இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
தேவா
உந்தன் கிருபை
தேவா
அது இனிமை
தேவை
எந்தன் வாழ்விற்கு
அது
தேனாய் என்றும்
இனிக்கும்
1. பறவை போல
உயர உயர பறந்து
சென்றாலும்
பாவ வாழ்வில்
எந்தன் உள்ளம்
பாய்ந்து செல்லுமே
பட்சம்
வைத்து உம் கிருபை
பொழிந்து என்றென்றும்
பாவி என்னை
உம்மைப்போலே
உயர்த்தியருளும்
2. பூவுலகில்
உயர்வு தாழ்வு
வாழ்வில் பல உண்டு
பூவின்
மாந்தர் உள்ளங்களிலும்
ஏக்கங்கள் உண்டு
பூவில்
வந்து நண்பர் இயேசு
என்னிடம் வந்தார்
பூவாய்
மாறும் எந்தன்
உள்ள பாரங்கள்
எல்லாம்
3. கருணை இல்லா
மாந்தர் உள்ளம்
கற்களாயிற்று
காற்றும்
செல்லா இருட்டரையாய்
இருன்றுபோயிற்று
கரங்கள்
நீட்டி உந்தன்
கிரியை நடப்பித்துவிட்டார்
கற்கள்
போன்ற உள்ளங்களிலும்
கருணை வடிவோடும்
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment