எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்

எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

          எண்ணி எண்ணிப் பார் எண்ணி பார்

            எபிநேசர் செய்த நன்மைகளை - 2

 

                        நன்றி நன்றி நன்றி

                        கோடி கோடி நன்றி

                        பலிகள் செலுத்திடுவோம் - 2

 

1.         தண்டிக்கப்பட்டார் நாம் மன்னிப்படைய

            நீதிமான் ஆக்கினாரே

            நொறுக்கப்பட்டார் நாம் மீட்படைய

            நித்திய ஜீவன் தந்தார் - 2 - நன்றி

 

2.         காயப்பட்டார் நாம் சுகமாக

            நோய்கள் நீங்கியதே

            சுமந்து கொண்டார் நம் பாடுகள்

            சுகமானோம் தழும்புகளால் - 2 - நன்றி

 

3.         சாபமானார் நம் சாபம் நீங்க

            மீட்டாரே சாபத்தினின்று

            ஆபிரகாமின் ஆசீர்வாதங்கள்

            பெற்றுக் கொண்டோம் சிலுவையினால் - 2 - நன்றி

 

4.         ஏழ்மையானார் சிலுவையிலே

            செல்வந்தனாய் நாம் வாழ

            சாவை ஏற்றார் நாம் ஜீவன் பெற

            முடிவில்லா வாழ்வு தந்தார் - 2 - நன்றி

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு