18 May 2023

என்னால் ஒன்றும் கூடாதே

என்னால் ஒன்றும் கூடாதே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

          என்னால் ஒன்றும் கூடாதே

            உம்மால் எல்லாம் ஆகுமே

                        உம் திருக்கரம் பிடித்து என்னை

                        தினம் நடத்துமே

 

1.         உளையான பாவ செற்றிலே உழன்ற என்னையே

            உயர்தலத்தில் நிறுத்தியே உறுதியாக்கினீர்

            உம்மை என்றும் பொற்றவே

            உம்வழி என்றும் நடக்கவே - உம்திரு

 

2.         எந்தன் நீதி யாவுமே அழியுங் கந்தையே

            உந்தன் ரத்தம் சிந்தியே சொந்தமாக்கினீர்

            என்ன ஈடு செய்குவேன்

            என்னை உமக்கு ஈகுவேன்

 

3.         எந்த பாவியாயினும் தள்ளேன் என்றீரே

            இந்தடிபலவீனனை ஏற்றுக்கொள்வீரே

            உந்தன் சித்தம் செய்யவே

            தந்தேன் என்னை என்றுமே - உம்

 

4.         கண்ணிகளில் சிக்கியே கலங்கும் வேளையில்

            இன்னல் நீக்கி என்னையே அரவணைப்பீரே

            அன்னை போல என்னையே

            அனுதினமும் காப்பீரே - உம்திரு

 

5.         திருமறையின் வழியிலே தினம் நடக்கவே

            அருள் அளித்து என்னையே வழி நடத்துமே

            வருகையில் நான் உம்முன்னே

            வழுவிடாமல் நிற்கவே - உம்திரு

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...