எந்நாளுமே துதிப்பேன் என் நேசரேசுவை
எந்நாளுமே
துதிப்பேன் என்
நேசரேசுவை!
காலையும்
மாலையும் மற்றெல்லா
வேளையும்
கையையும்
நெஞ்சையும்
மேலேயுயர்த்தி
நான்
1. பாவங்கள்
நீக்கி விட்டார்!
தம் இரத்தத்தைச்
சிந்தி - பாவங்கள்
காணமற்
போயினேன்
கண்டு பிடித்தாரே!
தூக்கி
சுமந்து தம் மந்தையில்
சேர்த்தாரே
2. அன்பின்
சொருபி அவர்
அவ்வன்பை
காட்டினார் - அன்பின்
மாட்டுத்
தொழு முதல்
சிலுவை மரம் வரை
ஈன
கோலம் புண்டு
நிந்தையும்
சகித்தார்
3. சாவின்
நிழலதிலும்
பிசாசினால்
வரும் சாவின்
நிழலதிலும்
நானே உன்
பரிகாரி விலக்குவேன்
வியாதியை
நோக்கிப்பார்
என்னையே இரட்சிப்பேன்
என்பதால்
4. அளிக்கிறார்
நன்மையெல்லாம்
ஒவ்வொரு
நாளிலும் அளிக்கிறார்
நன்மையெல்லாம்
உண்ணும்
உடையையும்
வேண்டும்
பொருளெல்லாம்
குறைவின்றி
நிறைவாக தந்திடுவதால்
நான்
5. பரிசுத்த
ஜீவியத்தை
இப்பார்தலத்திலே
- பரிசுத்த ஜீவியத்தை
தேவ பயத்தோடு ஊக்கமாய்
செய்யவே
ஆவியானவர்
ஈவையும் எனக்களித்ததால்
6. வந்திடுவாரே
அவர் வெகுசீக்கிரமாக
வந்திடுவாரே
அவர்
காண்பேன்
அவரை நான் சேர்வேன்
அவரிடம்
அல்லேலுயா
பாடிப் பாடிப்
போற்றியே
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment