30 May 2023

உம்மோடு நானிருந்தால் உம்மைப்

உம்மோடு நானிருந்தால் உம்மைப்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

                   உம்மோடு நானிருந்தால்

                        உம்மைப் போல் மாறிடுவேன் ஏசையா

                        உலக வாழ்வு மாயைதானய்யா

                        உம்மோடு வாழ்வு உண்மைதானய்யா (2)

 

1.         பாவத்தின் சாயலில் நான் வளர்ந்தேன்

            பரிசுத்தமின்றி நான் அலைந்தேன்

            என்னையும் தேடி வந்தீரய்யா

            உம்மைப் போல் என்னையும் மாற்றிடவே

 

2.         மாம்சத்தின் கிரியைகள் மறைந்தே போகும்

            ஆவியின் கனிகளோ வளர்ந்தே பெருகிடும்

            அதிசயம் அனுதினம்

            என் வாழ்வைத் தொடருமே

            அன்பான தேவனே உமக்கே ஸ்தோத்திரம்

 

3.         மகிமையின் சாயல் அடைந்திடவே

            மறுரூபமாவேன் இமைப் பொழுதில்

            முகமுகமாக உம்மை நான் காண்பேன்

            மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவரே

 

4.         கண்ணீர் யாவும் மாறியே போகும்

            கவலைகள் யாவும் மறைந்தே போகும்

            துன்பங்கள் துயரங்கள் இல்லாமல் போகும்

            தூயவர் உம்மை துதித்திடுவேன்

 

 

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...