02 May 2023

விசுவாச வீரனாகவே யோபு

விசுவாச வீரனாகவே யோபு

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

 

                   விசுவாச வீரனாகவே

                        யோபு என்னும் மனிதன் இருந்தான்

                        உத்தமனாகவும் சன்மார்க்கனாகவும்

                        தேவனுக்குப் பயந்து நடந்தான்

 

1.         சாத்தான் யோபுவை சோதிக்க

            கர்த்தர் இயேசு ஒப்புக் கொடுத்தார்

                        யோபின் குடும்பத்தையும் ஆஸ்தி அனைத்தையும்

                        சாத்தான் நிர்மூலமாக்கினான் - 2

 

2.         ஆஸ்தியெல்லாம் தீர்ந்து போனதே

            குருவிகளும் மாண்டு போயின

                        கர்த்தர் கொடுத்தவர் அவரே எடுத்திட்டார்

                        கர்த்தருக்கு ஸ்தோத்திரம் சொன்னான் - 2.

 

3.         கொடிய ரோகம் வந்த போதிலும்

            கர்த்தர் பேரில் நிலைத்திருந்தான்

                        மனைவி அங்கலாய்க்க நண்பர் மனம் நோக

                        யோபு மனம் மாறவில்லையே - 2

 

4.         சாத்தான் பயந்து ஓடினான்

            யோபுவை தேவன் ஆசீர்வதித்தார்

                        முன் நிலமையைவிட பின் நிலமையை தேவன்

                        இரட்டிப்பாக மாற்றிக் காட்டினார் - 2

 

5.         யோபை போல நாமுமே

            நம்பிக்கையில் வென்று வாழுவோம்

                        துன்பங்கள் வந்தாலும் நஷ்டங்கள் வந்தாலும்

                        கர்த்தரை நாம் ஸ்தோத்தரிப்போமே - 2

 

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...