என்னையே கொடுத்தேன் உனக்காய்
இப்பாடலின்
கானொளியை
முகநூலில் காண...
என்னையே
கொடுத்தேன் உனக்காய்
என் மகனே
அதை அறியாயோ
நித்திய
ஜீவனை நீ அடைய
என் ஜீவனையே கொடுத்தேன்
1. ஓர் காரணமில்லாமலே
பல வாதைக்குள்
ஆகினேனே
உன் பாவத்தினால்
தானே
இப்பாடுகள்
சகித்தேனே
- என்னையே
2. ஈலோக
பாவமெடுத்தேன்
கல்வாரி
மலைதனிலே
உன் பாவமதும் சுமந்தே
நான் தொங்கினேன்
சிலுவையிலே
- என்னையே
3. எத்தீமைகள்
ஒன்றுமே தான்
என்னில்
யாருமே காணலையே
உன் மீறுதல்
போக்கிடவே
நான் பாதகன்
போல் மாண்டேனே
- என்னையே
4. உன் சொந்த
வழி நடந்தால்
சேர்ந்திடுவாய்
தீ நரகில்
ஓர் அந்தமுமில்லலாமலே
நீ வெந்திடுவாய்
அதிலே - என்னை
5. உன் ஆத்துமா வாழ்வடைய
உன்னை அளித்திடு
என் கரத்தில்
உன் பாவவினை அகற்றி
மெய் பாக்கிய மீந்திடுவேன்
- என்னை
6. நீ சேர்ந்திடுவாய்
நிஜமே
நித்யானந்த
மோட்சமதில்
நீடுழி
சுகித்திடுவாய்
என் மகிமை
சமூகத்தில் - என்னை
PDF பாடல்
புத்தகங்கள் பதிவிறக்கம்
Comments
Post a Comment