எரியுமக்கினிபோல் உமதாவி

எரியுமக்கினிபோல் உமதாவி

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

                   எரியு மக்கினி போலுமதாவி - நீர்

                        சொரிந்திடும் பரனே - தினந்தினமாய்

 

அனுபல்லவி

 

            உரைத்திட நாவால் உயிருடன் மொழிகள்

            சொரிந்திடும் வரங்கள் - நிறைந்தொழுக - இப்போ

 

சரணங்கள்

 

1.         சிநேக அக்கினி யென்னில் எரிந்தெழும்பி - பெரும்

            தாகமாத்துமாக்கள் மேலோங்கிடவே

            அன்பினுரைகளால் கடினவுள்ளமிளகி

            வேகம் மரண பாதை விட்டு விலக - அவர் - எரியு

 

2.         பலிபீடத்தின் திரு அக்கினியால் - என்

            அதரத்தின் குறைகளகன்றிடவும்

            பலவித நூதன வசனங்களுரைக்கப்

            பலமான கிருபை பெற்றிடவும் - வாரும் - எரியு

 

3.         உம்மி லடியேன் பிரகாசித்திட - நான்

            என்னை முழுதுமாக வெறுத்து விட்டேன்

            மன்னவா எந்தனில் வந்து அவதரித்து

            வானாக்கினியால் முற்றும் கழுவி விடும் - வந்து - எரியு

 

4.         தேசமெல்லாம் பற்றியெரிந்திடவே - உம்

            தாசரிலக்கினி மூண்டெரிந்து

            நாச உலகந்தனிலக்கினிபோல் உப

            தேசிக்கத் திரு நல் வார்த்தைகளை - உப் - எரியு

 

5.         அக்கினி பூவிலிட வந்தவரே - மிக

            விக்கினம் பெருகுதே பாருமதை

            அக்கினியாயுமதடியார்க ளெரிந்திட

            அக்கினி அபிஷேகம் அளித்துவிடும் - இப்போ - எரியு

 

 

 

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு