எப்போதும் உம்மோடுதான் உம்
எப்போதும்
உம்மோடுதான்
உம் வலக்கரம் என்னோடுதான்
என் வாஞ்சையெல்லாம்
நீர்தானே
என் வாழ்க்கையெல்லாம்
உம் புகழ்தானே
ஆராதனை
ஆராதனை - 2
ஆயுள்
இருக்கும்வரை
- என்
1. பரலோகத்தில்
உம்மையல்லாமல்
எனக்கு
யாருண்டு
பூலோகத்தில்
உம்மைத்தவிர
வேறே விருப்பம்
இல்லை - எனக்கு
2. என்றென்றைக்கும்
என் உள்ளத்தின்
பெலனே நீர்தானையா
உம் சித்தம்
போல் நடத்துகிறீர்
மகிமையில்
ஏற்றுகொள்வீர்
- உம்
3. காருண்யத்தின்
கயிறுகளால்
கட்டி என்னை
இழுத்துகொண்டீர்
பேரன்பினால்
அணைத்துகொண்டீர்
பெரியவனாக்கிவிட்டீர்
- என்னை
4. கழுத்தில்
உள்ள நுகம் நீக்கி
நிமிர்ந்து
நடக்கச் செய்தீர்
- என்
கற்றுகொடுத்தீர்
கரம் பிடித்து
கைவிடாமல்
காப்பாற்றினீர்
- இதுவரை
5. உம்மைத்தானே
அடைக்கலமாய்
அண்டிகொண்டேன்
அனுதினமும்
புகலிடமே
என் மறைவிடமே
உம் புகழ்தனை சொல்லி
வருவேன்
இப்பாடலின் கானொளியை
முகநூலில் காண...
PDF
பாடல் புத்தகங்கள்
பதிவிறக்கம்
Comments
Post a Comment