நீர் என்னை காண்கின்ற தேவன் தேவன்

நீர் என்னை காண்கின்ற தேவன் தேவன்

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

            நீர் என்னை காண்கின்ற தேவன் தேவன்

            நீர் என்னை நடத்துகின்ற தேவன் தேவன்

            உமக்கு மறைவாக எங்கே நான் ஓடுவேன்

            உமக்கு மறைவாக எங்கே நான் ஒளிவேன்

 

                        வானத்தில் ஏறினாலும் அங்கேயும் இருக்கிறீர்

                        பூமியில் படுத்தாலும் நீர் என்னை சுமக்கிறீர்

 

1.         வனாந்திர பாதையிலே ஆகாரை கண்டீரே

            வாழ்க்கையை வெளிப்படுத்தி வாழ வைத்திரே

            அவளின் வேதனை வியாகுலத்தை மாற்றினீரே

            நீர் என்னை என்னை காண்கின்ற தேவன் என்றாளே

 

2.         சீனாய் வனாந்திரத்தில் மோசேயை கண்டீரே

            முட்செடியின் நடுவில் நின்று தேவன் நீர் பேசினீரே

            தம்மை வெளிப்படுத்தி திட்டத்தை தந்தீரே

            என் ஜனத்தின் வேதனையை கண்டேன் என்றீரே

 

3.         பாவத்தில் உழன்ற என்னை தேடி வந்தீரே

            பரிசுத்த இரத்தத்தால் கழுவி மீட்டீரே

            பரலோகத்தை இராஜ்ஜியத்தை வெளிப்படுத்தி தந்தீரே

            நீர் என்னைக் காண்கின்ற தேவன் என்பேனே

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு