29 May 2023

என்னிலே தகுதி ஒன்றுமில்லையே

என்னிலே தகுதி ஒன்றுமில்லையே

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

 

 

 

                    என்னிலே தகுதி ஒன்றுமில்லையே

                        என் தேவன் முன்னால் மேன்மை பாராட்ட

 

1.         குயவனாம் தேவன் கையிலே

            நான் வெறும் களிமண்தானே

            வனைபவரும் வடிவமைப்பதும் தேவனே

            என்னில் வாழ்வளித்து நடத்துவதும் தேவனே - என்னிலே

 

2.         பாவியில் பிரதான பாவி நான்

            என் நீதி அழுக்கான கந்தையே

            கழுவிட்டார் தூய தம் இரத்தத்தால்

            என்னை மீட்டிட்டார் அளவில்லாத கிருபையால் - என்னிலே

 

3.         நடப்பதெல்லாம் உம்மையல்லாமல்

            என்னாலேதும் நடக்கலாகுமோ

            ஆகும் நீர் சொன்னால் என்றுமே

            கூடாதது உம்மால் ஒன்றும் இல்லையே - என்னிலே

 

 

           

 

           

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...