அருள் நாதர் நாமமதில் ஒருமனமாய்
உருகி
தொழுகின்ற
நேரமெல்லாம்
எழும்பிடுவார்
நடுவில் - நாம்
1. இதயம் நொறுங்கினோரின்
ஆதரவும் அவரே
- 2
கதறல்கள் கேட்டிடுவார் பதறாமல்
அணைத்திடுவார்
- 2 - அருள் நாதர்
2. நோயினால் நொந்தவரை
தாயைப் போல் அணைப்பவரே - 2
பரிகாரி நானே
என்பார்
பட்சமாய் தாங்கிடுவார்
- 2 - அருள் நாதர்
3. மாயையில் மயங்கினோரை
தயை தந்து மாற்றுவாரே
- 2
தூயாவி ஈந்திடுவார்
தூய்மையாய் மாற்றிடுவார்
- 2 - அருள் நாதர்
4. கண்ணீரைத் துடைத்திடுவார்
கரம்பற்றி நடத்திடுவார்
- 2
வாக்கு மாறாத
தேவன் வார்த்தையில்
உண்மையானவர்
- 2 - அருள் நாதர்
5. ஆத்தும நேசரவர்
ஆறுதல் உனக்களிப்பார்
ஆபத்தில் துணையவரே
அல்பா ஒமேகா அவர்
- 2 - அருள் நாதர்
6. தாயைப் போல் தேற்றிடுவார்
தந்தை போல் சுமந்திடுவார்
- 2
திகையாதே மகனே(ளே)
என்றார்
தினம் காக்கும்
தேவனவர் - 2 - அருள் நாதர்
7. ஒருபோதும் கைவிடாரே
ஒருநாளும் விலகிடாதே
- 2
மார்போடணைத்துக்
கொள்வார்
மகிமையிலே சேர்த்துக்
கொள்வார் - 2 - அருள் நாதர்
No comments:
Post a Comment