01 May 2023

நட்ட நடு ராத்திரியில

நட்ட நடு ராத்திரியில

மேலும் அதிக பாடல்களுக்கு

 

 

 

இப்பாடலின் கானொளியை முகநூலில் காண...

 

 

 

 

          நட்ட நடு ராத்திரியில

          மொட்டு போல பூத்தாரே

          மாட்டு கொட்டகையில் உதித்தாரே

          நம்ம இயேசு சாமியே

 

            நட்ட நடு ராத்திரியில

            கொட்டும் பனி சாரலிலே

            மொட்டு போல பூத்தாரே இயேசு சாமி

            மாட்டு கொட்டகையில் உதித்தாரே இயேசு சாமி - 2

 

                        மெட்டு கட்டி பாடுவோம்

                        கை தட்டி ஆடுவோம் -2

            கஷ்டமெல்லாம் போக்கிடுவார் இயேசு சாமி

            நம்ம இஷ்டம் போல வாழ வைப்பார் ஓன்று கூடி - கஷ்ட

 

1.         ஏழைகளை நேசிக்க ஏழையாக

            வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி

            எல்லோருக்கும் வாழ்வு தர மனுஷனாக

            வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி - 2

 

                        நீதி நேர்மை அன்பு கொண்ட இறையாட்சியை

                        மண்ணில் படைத்திடவே வாழ வந்தார் இயேசு சாமி -2

 

            காலம் பொறந்திடும் நேரம் வந்திடும்

            நல்ல காலம் பொறந்திடும் - 2

            நல்ல நேரம் வந்திடும்

            அன்பு அமைதி ஆண்டவரின்

            ஆசி கிடைச்சுடும் - நட்ட நடு

 

2.         பாலைவன பூமியையே பசுமையாக்க

            வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி

            பசிச்ச வயித்துக்கு இங்கு உணவாக

            வந்த சாமி நம்ம சாமி - நம்ம இயேசு சாமி - 2

 

                        வறுமை ஏழ்மை இல்லாத உலகத்தையே

                        உருவாக்க உருவெடுத்தார் இயேசு சாமி

 

            வருத்தம் பறந்திடும்

            கவலை நீங்கிடும்

            நம்ம வருத்தம் பறந்திடும்

            மன கவலை நீங்கிடும்

            மகிழ்ச்சி என்றும் நம் வாழ்வில்

            வந்து தங்கிடும் - நட்ட நடு

 

 

 

 

 

 

 

 

கிறிஸ்தவ பாடல் தொகுப்பு

 

PDF பாடல் புத்தகங்கள் பதிவிறக்கம்

 

 

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...