என் இயேசுவே உம்மையே நான்


64.     “My Jesus! I love Thee! I know Thou art mine!”           (659)

1.         என் யேசுவே! உம்மையே நான் நேசிக்கிறேன்;
            வேறெந்த வீண் வாழ்வையும் நாடாதிருப்பேன்;
            உம்மாலே மா நன்மையை நான் கண்டடைந்தேன்;
            என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்.

2.         இப்பாவியின் பேரில் முந்தி நேசம் வைத்தீர்;
            நீர் பிராணத்தியாகஞ் செய்து மீட்டுக்கொண்டீர்;
            முட் க்ரீடம் ஐங்காயமும் தியானிக்கிறேன்;
            என் நாதா! மேன் மேலும் உம்மை நேசிக்கிறேன்.

3.         பேரன்பின் சொரூபி! உம்மைப் போற்றுகிறேன்;
            எப்போதும் உம்மண்டை தங்க வாஞ்சிக்கிறேன்;
            என் ஜீவன் போனாலுங்கூட நீங்கமாட்டேன்;
            என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்.

4.         பேரின்ப மேலோகத்தில் ஆனந்தங்கொள்வேன்;
            நீடூழி உம்முகம் கண்டு ஸ்தோத்திரிப்பேன்;
            எப்பாவ மில்லாமலும் நான் வாழ்த்தல் செய்வேன்
            என் நாதா! மேன்மேலும் உம்மை நேசிக்கிறேன்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு