கர்த்தரின் பந்தியில் வா
கர்த்தரின் பந்தியில் வா
306.
(304) சங்கராபரணம் ரூபகதாளம்
பல்லவி
கர்த்தரின் பந்தியில் வா,-சகோதரா
கர்த்தரின்
பந்தியில் வா.
அனுபல்லவி
கர்த்தர்
அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின
காரணத்தை
மனப் பூரணமாய் எண்ணி, - கர்த்தரின்
சரணங்கள்
1. ஜீவ
அப்பம் அல்லோ?-கிறிஸ்துவின்
திருச்
சரீரம் அல்லோ?
பாவ
மனங் கல்லோ?-உனக்காய்ப்
பகிரப்பட்ட
தல்லோ?
தேவ
குமாரனின் ஜீவ அப்பத்தை நீ
தின்று
அவருடன் என்றும் பிழைத்திட. - கர்த்தரின்
2. தேவ
அன்பைப் பாரு;-கிறிஸ்துவின்
சீஷர்
குறை தீரு;
பாவக்
கேட்டைக் கூறு;-ராப்போசன
பந்திதனில்
சேரு;
சாவுக்குரிய
மா பாவமுள்ள லோகம்
தன்னில்
மனம் வைத்து அன்னியன் ஆகாதே. - கர்த்தரின்
3. அன்பின்
விருந்தாமே;-கர்த்தருடன்
ஐக்யப்
பந்தி யாமே;
துன்பம்
துயர் போமே;-இருதயம்
சுத்த
திடனாமே;
இன்பம்
மிகும் தேவ அன்பின் விருந்துக்கு
ஏது
தாமதமும் இல்லாதிப்போதே வா. - கர்த்தரின்
- மரியான் உபதேசியார்
Comments
Post a Comment