போசனந்தா னுமுண்டோ


போசனம் உண்டோ திருராப்போசனம்போல

307. (305) உசேனி                               ரூபகதாளம்
பல்லவி

                   போசனந்தா னுமுண்டோ-திருராப்
                   போசனம் போலுலகில்?

அனுபல்லவி

            ராசரும் வையக நீசரும் அம்பரன்[1]
            நேசரும் யேசுவின் தாசரும் உண்டிடப் - போசனம்

1.         கர்த்தன் மரணத்தின் சாசன[2] போசனம்;
            கன்மி[3]கட் கானமெய் நேசத்தின் போசனம்;
            பக்தரை யொன்றாய் இணைத்திடும் போசனம்;
            பஞ்சகாலத்தும் கிடைத்திடும் போசனம். - போசனம்

2.         பூர்வ ஏற்பாட்டோர்கள் காணாத போசனம்;
            பொன் வானதூதரும் உண்ணாத போசனம்;
            ஓர் காலமும் குறைவாகாத போசனம்;
            ஒப்பில்லான் மாமிசம் ரத்தமாம் போசனம். - போசனம்

3.         பஸ்காப் பலியின்பொருள் என்னும் போசனம்;
            பாவி புசிக்கும் சமாதான போசனம்;
            நிஷ்கார[4] நிந்தைப் பவம்போக்கும் போசனம்;
            நின்மலன் தந்திடும் அற்புதப் போசனம். - போசனம்

4.         மாமலைப் பீடப் பலியான போசனம்;
            மானிட ஞானத்துக் கெட்டாத போசனம்;
            ஆமென்று நாங்கள் போதித்திடும் போசனம்;
            அத்தனார் மெய்மொழியாலான போசனம். - போசனம்

5.         மாமிசம் அப்பத்தோடே வரும் போசனம்;
            வல்லன் ரத்தன் ரசத்தோடுறும் போசனம்;
            பூமியில் மோட்சம் கொணர்ந்திடும் போசனம்;
            பொய்க் கிறிஸ்தோர்களுக் காக்கினைப் போசனம். - போசனம்

6.         ஒப்பனை யென்னக் கூடாதமெய்ப் போசனம்;
            ஒன்று மற்றொன்றாக மாறாத போசனம்;
            தப்பற நாங்கள் புசித்திடும் போசனம்;
            சந்தோஷப் பாவப் பொறுப்பீயும் போசனம். - போசனம்

7.         செத்தும் உயிரோ டெழும்பிடும் போசனம்;
            சீவனோ டென்றென்றும் வாழ்விக்கும் போசனம்;
            நித்தமுண்டாலும் சலிக்காத போசனம்;
            நேச சஞ்சீவி யெனுந்திருப் போசனம். - போசனம்

- ஞா. சாமுவேல்


[1] கடவுள்
[2] கட்டளை
[3] பாவி
[4] காரணமில்லாத

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே