09 May 2019

அல்லேலூயா துதி அல்லேலுயா ஜெயம்

கி.கீ:383

To Download Txt Lyrics file

 

                             அல்லேலூயா துதி

 

383. (83 L.) தன்யாசி                                               சாபுதாளம்

 

                             பல்லவி

 

            அல்லேலூயா துதி, அல்லேலுயா ஜெயம்,

            வல்லத் திரியேகமகத்வ தேவற்கென்றும்.

 

                             அனுபல்லவி

 

            சொல்லரும் சுத்த சுவிசேடந்தந்தவர்

            தூயன் சகாயனுபாயானாம் நேயற்கு. - அல்லே

 

                             சரணங்கள்

 

1.         வானம் புவியும்படைத்த பிதாவுக்கும்

            மைந்தரை மீட்ட சுதனென்ற தேவற்கும்

            ஞானவிசேடம் வெளியிட்ட ஆவிக்கும்

            நம்மாலிந்நாளு மெந்நாளும் நற்றோத்திரம் - அல்லே

 

2.         வேதோபதேச அப்போஸ்தலன்மார்களை

            மேதினியெங்கும் அனுப்பித்திருமறை

            தீதறப்போதகஞ் செய்யவழி செய்த

            சிங்காரக்கர்த்தர்க்கு மங்காமகத்வர்க்கு. - அல்லே

 

3.         வாதைகள் மெத்த வதைத்துந் திருச்சபை

            வாடாது மிக்க செழிப்பாய் வளர்ந்திட,

            ஏதுங்குறைவறவே செய்த தேவனை

            ஏற்றித்துதிசெய்வம், போற்றிப் புகழ்செய்வம் - அல்லே

 

4.         ஆகாதபேயின் அகோரத்தினாற் சபை

            யானதுள்வந்து புகுந்த பிழைகளை

            வாகாக நீக்கவழி செய்த கர்த்தனை

            வந்தனை செய்வோம் நாம் சிந்தனையாகவே - அல்லே

 

5.         வானாதி சேனைமகிழ்ந் திசைகள்பாட

            மக்கட்குழாமும் களிப்புடனேசேர

            ஈனப்பிசாசின் இடர்களெல்லாந்தீர,

            ஏகன்தயைசெய்தார், வாகாய் அருள்பெய்தார். - அல்லே

 

 

- ஞா. சாமுவேல்

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...