09 May 2019

பஜித்திடும் சுவிசேட திருச்சபையாரே


பஜித்திடும் திருச்சபையோரே

382. (81L) பியாகு                                          ஆதி தாளம் 
பல்லவி

            பஜித்திடும் சுவிசேட திருச்சபையாரே,
            பரனை நினைத்துத் தினம் மகிழ்வீரே.

சரணங்கள்

1.         பஜித்திடும் சுவிசேஷசபைக்குள் வந்தோரே,
            பரனருளால் ஜெயமடைந்தீரே,
            துஜம்[1] பிடித்தே ஜெயமெனப் புகல்வீரே,
            தோத்ரசங்கீர்த்தனம் துத்யம் செய்வீரே. - பஜி

2.         நித்ய சுவிசேடமே நேர்வழியாமே,
            நிமலனருள் வழிபோவேமே.
            சத்ய மறைபிடிக்கில் வழிதவறோமே,
            தத்வ குணாகரன் தனைத்துதிப்போமே. - பஜி

3.         திருக்குருசில் மரித்தோரது நேசம்,
            தினம் மறவாதே, வைவிசுவாசம்.
            இரக்க புண்ணியங்களால் எழில் நகர்வாசம்,
            இனிபெறலாமென வெண்ணுதல் மோசம். - பஜி

- ஞா. சாமுவேல்


[1] கொடி

No comments:

Post a Comment

இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்

கீ.கீ:683 Youtube Link     1.       இந்தக் கடைசி காலத்திலே எக்காளம் தொனிக்கையில்             இயேசு விண்ணகத்தில்...