நன் மீட்பரே உம்மேலே


77.     “I lay my sins on Jesus,”                  (870)

1.         நன் மீட்பரே! உம்மேலே
            என் பாவம் வைக்கிறேன்:
            அன்புள்ள கையினாலே
            என் பாரம் நீக்குமேன்;
            நன் மீட்பரே! உம்மேலே
            என் குற்றம் வைக்க நீர்
            உம் தூயரத்தத்தாலே
            விமோசனஞ் செய்வீர்.

2.         நன் மீட்பரே! உம்மேலே
            என் துக்கம் வைக்கிறேன்;
            இப்போ திம்மானுவேலே,
            எப்பாடும் நீக்குமேன்;
            நன் மீட்பரே! உம்மேலே
            என் தீனம் வைக்க நீர்
            உம் ஞானம் செல்வத்தாலே
            சம்பூரண மாக்குவீர்.

3.         நன் மீட்பரே! உம்பேரில்
            என் ஆத்மா சார,  நீர்
            சேர்ந்து உம் திவ்ய மார்பில்
            சோர்பெல்லாம் நீக்குவீர்;
            நேசா! இம்மானுவேலே!
            யேசென்னும் நாமமும்
            உகந்த தைலம்போலே
            சுகந்தம் வீசிடும்.

4.         நன் மீட்பரே! பாங்காக
            அன்போடு சாந்தமும்
            நீர் தந்தும் சாயலாக
            சீராக்கி மாற்றிடும்;
            நன் மீட்பரே! உம்மோடு
            பின் விண்ணில் வாழுவேன்;
            நீடூழி தூதர் பாட,
            பாடின்றிப் பூரிப்பேன்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு