குணம் இங்கித வடிவாய் உயர் கோவே


மணம் இங்கதிவளமாய் உற வருவீர்

346. (307) சூரியகாந்தம்                                 ரூபகதாளம்

பல்லவி

            குணம் இங்கித வடிவாய் உயர் கோவே, யேசு தேவே,
            மணம் இங்கதி வளமாய் உற வருவீர், மேசியாவே.

சரணங்கள்

1.         மன்றல்[1] செய்து மனை புது மண
            வாளனோ டவ னேரும்[2]
            தன் துணையான மங்கையும் இங்கே
            தழைக்க அருள் தாரும். - குணம் 

2.         ஆதி மானிடற் கான ஓர் துணை
            அன்றமைத்த நற் போதனை,
            தீதற இணையாம் இவர்க் கருள்
            செய்குவீர், எங்கள் நாதனே. - குணம்

3.         தொன்று கானாவின் மன்றல் ஓங்கிடத்
            தோன்றிய தயாபரனே,
            இன்று மன்றல் சிறந்திட அருள்
            ஈந்திடும், க்ருபா கரனே. - குணம் 

4.         பண்பதில் அவ லேசமும்[3] குறை
            பாடில்லாத தெய்வீகனே,
            நண்பதில் இரு பேரும் வாழ்ந்திட
            நண்ணும், மா திரி யேகனே. - குணம்    

5.         உற்ற நல் உற வோடும் எங்கள்
            உரிமை ஆனவர் யாரும்
            பற்றதாய் உறு பக்தியோடும்மைப்
            பாட நல் மனம் தாரும். - குணம்

- யோ. பால்மர்


[1] விவாகம்
[2] நியமிக்கும்
[3] மிகச் சிறிது

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு