18 May 2019

நான் உம்மைப்பற்றி ரட்சகா


62.     “I am not ashamed to own my Lord"         (883)

1.         நான் உம்மைப்பற்றி, ரட்சகா!
            வீண் வெட்கம் அடையேன்;
            பேரன்பைக் குறித்தாண்டவா!
            நான் சாட்சி கூறுவேன்.

பல்லவி

                        சிலுவை யண்டையில்
                        நம்பி வந்து நிற்கையில்,
                        பாவப் பாரம் நீங்கி, வாழ்வடைந்தேன்;
                        எந்த நேரமும் எனதுள்ளத்திலும்
                        பேரானந்தம் பொங்கிப் பாடுவேன்.

2.         ஆ! உந்தன் வல்ல நாமத்தை
            நான் நம்பிச்சார்வதால்,
            நீர் கைவிடீர்! இவ்வேழையைக்
            காப்பீர் தேவாவியால்.

3.         மா வல்ல வாக்கின் உண்மையைக்
            கண்டுணரச் செய்தீர்;
            நான் ஒப்புவித்த பொருளை
            விடாமல் காக்கிறீர்.

4.         நீர் மாட்சியோடு வருவீர்,
            அப்போது களிப்பேன்;
            ஓர் வாசஸ்தலம் கொடுப்பீர்,
            மெய்ப்பாக்கியம் அடைவேன்.

No comments:

Post a Comment

ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா என்

நிஜீ.கீதங்கள்:1971 To Download Txt Lyrics file   Youtube Link                      ஆஸ்திகளெல்லாம் ஈடாகுமா    ...