போற்றுவேன் என் மீட்பர் அன்பை


61.     “I will sing of my Redeemer.” (896)

1.         போற்றுவேன் என் மீட்பர் அன்பை!
            ப்ராணன் தந்து ரட்சித்தார்;
            பாடுபட்டு! ரத்தஞ் சிந்தி,
            பாபம், சாபம் நீக்கினார்.

பல்லவி

                   போற்றும்! போற்றும் அல்லேலூயா
                        பூரண மீட்புண்டாக்கினார்,
                        தூய வல்ல ரத்தஞ் சிந்தி,
                        தீய பாவம் நீக்கினார்.

2.         நீசப் பாவியாம் என்பேரில்
            நேசம் வைத்துக் காட்டினார்;
            மீட்கும் பொருளாகத் தம்மை
            முற்றும் தந்தீடேற்றினார்.

3.         போற்றுவேன் சம்பூரண மீட்பை!
            ப்ராணநாதர் காக்கிறார்;
            வாணாள் எல்லாம் பாவப்போரில்
            வெற்றிகாணச் செய்கிறார்.

4.         போற்றுவேன் ஆனந்தமாக!
            பாடி, நன்றி செல்லுவேன்;
            என்னை மீட்ட ஏசுவோடே
            என்றும், தங்கி, சேவிப்பேன்

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு