18 May 2019

அருள் மாரி எங்குமாக

சு.கீ:56

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

56.       "Lord, I hear of showers of blessing". (485)

 

1.       அருள் மாரி எங்குமாக

            பெய்ய; அடியேனையும்,

            கர்த்தரே; நீர் நேசமாக

            சந்தித்தாசீர்வதியும்,

                        என்னையும் என்னையும்

                        சந்தித்தாசீர்வதியும்.

 

2.         என் பிதாவே! பாவியேனை

            கைவிடாமல் நோக்குமேன்,

            திக்கில்லா இவ்வேழையேனை

            அன்பாய்ச் சேர்த்துக்கொள்ளுமேன்.

                        என்னையும், என்னையும்

                        அன்பாய்ச் சேர்த்துக் கொள்ளுமேன்.

 

3.         யேசுவே! நீர் கைவிடாமல்,

            என்தன் பாவம் நீக்கிடும்.

            ரத்தத்தாலே மாசில்லாமல்

            சுத்தமாக்கி ரட்சியும்

                        என்னையும், என்னையும்

                        சுத்தமாக்கி ரட்சியும்

 

4.         தூய ஆவி! கைவிடாமல்

            என்னை ஆட்கொண்டருளும்,

            பாதை காட்டி, கேடில்லாமல்

            என்றும் காத்துத் தேற்றிடும்

                        என்னையும், என்னையும்

                        என்றும் காத்துத் தேற்றிடும்.

 

No comments:

Post a Comment

அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்

பாடல் To Download Txt Lyrics file     Youtube Link               அவர் நாமத்தில் இயேசு நாமத்தில்          ...