பேரின்ப தேசம் பாடுவேன்
13. 'I love
to think of the heavenly land' (991)
1. பேரின்ப தேசம்
பாடுவேன்;
விண்
தூதர் வாழவும்.
எப்பாடுமின்றிச் செழிப்பார்
என் இஷ்டர் நேசரும்
பல்லவி
நீடுழி காலம், நீடுழி காலம்,
நீடுழி காலம், நீடுழி வாழுவோம்.
2. பேரின்ப தேசம் பாடுவேன்;
என் மீட்பர் ஜோதியாய்
வான் ஆட்சிசெய்யப் போற்றுவார்
எல்லாரும் ஏகமாய்.
3. பேரின்ப தேசம் பாடுவேன்;
மெய்ப் பக்தர் வீடதாம்.
பொற்க்ரீடம் ஜெயகோலமும்
கெம்பீரமும் உண்டாம்.
4. பேரின்ப தேசம் பாடுவேன்;
அங்காரவாரிப்போம்
சங்கீத மேளம் கோஷ்டிக்க
ஆனந்தம் அடைவோம்.
5. பேரின்ப தேசம் பாடுவேன்;
கிரேஷ்ட நாடதே.
அங்கேறிப்போக ஆவலும்
என் உள்ளத்தில் உண்டே.
Thank You
ReplyDelete