பாவ சஞ்சலத்தை நீக்க


14.     'What a Friend we have in Jesus!'             (319)

1.         பாவ சஞ்சலத்தை நீக்க
            ப்ராண ஸ்நேகிதருண்டே
            பாவப் பாரம் தீர்ந்துபோக
            மீட்பர் பாதம் தஞ்சமே.
            சால துக்க துன்பத்தாலே
            நெஞ்சம் நொந்து சோருங்கால்,
            துன்பம் இன்பமாக மாறும்
            ஊக்கமான ஜெபத்தால்.

2.         கஷ்ட நஷ்ட முண்டானாலும்
            யேசுவண்டை சேருவோம்.
            மோச நாசம் நேரிட்டாலும்
            ஜெப தூபங் காட்டுவோம்.
            நீக்குவாரே நெஞ்சின் நோவை
            பெலவீனம் தாங்குவார்
            நீக்குவாரே மனச்சோர்பை;
            தீயகுணம் மாற்றுவார்.

3.         பெலவீனமானபோதும்
            கிருபாசனமுண்டே.
            பந்து ஜனம் சாகும்போதும்
            புகலிடம் இதுவே.
            ஒப்பில்லாத ப்ராணநேசா
            உம்மை நம்பி நேசிப்போம்.
            அளவற்ற அருள் நாதா!
            உம்மை நோக்கிக் கெஞ்சுவோம்.

Comments

Popular posts from this blog

உன்னதரே உம் மறைவில் தங்கி வாழ்கிறேன்

என் வாழ்விலே நீர் பாராட்டின

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே