மோட்சலோக தூதர் ஸ்துதி செய்கிறார்


67.     'Ring the bells of heaven! there is joy today'      (650)

1.         மோட்சலோக தூதர் ஸ்துதி செய்கிறார்.
            நீசப் பாவி குணப்பட்டதால்;
            தேவனும் மகா சந்தோஷமாகிறார்,
            மகன் மீண்டும் வந்து சேர்ந்ததால்.

பல்லவி

                   போற்றும்! போற்றும் ஏககூட்டமாய்!
                        போற்றும்! போற்றும் பேரானந்தமாய்
                        கெட்டுப்போன பாவி மீண்டும் வந்திட்டான்
                        குணமாறி ரட்சிப்படைந்தான்.

2.         மோட்ச லோக தூதர் ஏகவாஞ்சையாய்!
            ரட்சிப்பைக் கொண்டாட கூடினார்;
            ரட்சா பெருமானைப் பேரானந்தமாய்
            பாடிப்போற்றி வாழ்த்தி நிற்கிறார்.

3.         மோட்சலோக தூதரோடு ஏகமாய்
            ஸ்தோத்திர கீதம் பாடிப் போற்றுவோம்;
            யேசுநாமம் ஜெயம் என்று இன்பமாய்
            ஆரவாரத்தோடே வாழ்த்துவோம்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு