உந்தன் செட்டை நிழலில்


66.     “In the shadow of His wings”.          (664)

1.         உந்தன் செட்டை நிழலில்
            இளைப்பாறலாம்
            எந்தப்பாடும் துன்பும் நீங்கும்
            சற்றும் அணுகாமல் நீங்கும்.
            உந்தன் செட்டை நிழலில்
            இளைப்பாறலாம்.
            உந்தன் செட்டை நிழலில்
            இளைப்பாறலாம்.

பல்லவி

                        தங்குவேன், (ஸ்வாமி)
                        தங்குவேன், (ஸ்வாமி)
                        தங்குவேன், (ஸ்வாமி)
                        உந்தன் செட்டை நிழலில்;
                        சுகிப்பேன், (ஸ்வாமி)
                        சுகிப்பேன், (ஸ்வாமி)
                        சுகிப்பேன், (ஸ்வாமி)
                        உந்தன் செட்டை நிழலில்.

2.         உந்தன் செட்டை நிழலில்
            சமாதானமாம்!
            நெஞ்சின் நோவு முற்றும் ஆறும்
            துன்பம் இன்பமாக மாறும்;
            உந்தன் செட்டை நிழலில்
            சமாதானமாம்!
            உந்தன் செட்டை நிழலில்
            சமாதானமாம்!

3.         உந்தன் செட்டை நிழலில்
            பேரானந்தமாம்!
            போற்றுவேன் சந்தோஷமாக!
            பாடுவேன் கெம்பீரமாக!
            உந்தன் செட்டை நிழலில்
            பேரானந்தமாம்,
            உந்தன் செட்டை நிழலில்
            பேரானந்தமாம்.

Comments

Popular posts from this blog

தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே

கிறிஸ்தவ கீர்த்தனைகள்

என்னக் கொடுப்பேன் இயேசுவுக்கு